GROUP – I SERVICES, MAIN WRITTEN EXAMINATION.

  1. கடல் நீரின் உவர்ப்பியத்தை பாதிக்கும் காரணிகளை விளக்குக.
  2. தமிழ் நாட்டின் முக்கிய பழங்குடியின மக்கட் குழுக்கள் பற்றி விவரிக்கவும்
  3. கங்கை நதி தூய்மைபடுத்துதல் தேசிய திட்டம் தேவை குறித்து விவாதிக்கவும்
  4. பெரியச்சமவெளிகள்  இந்தியாவின் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த நிலத்தோற்றங்கள் - நியாயப்படுத்துக.
  5. இந்திய மண் வகைகளின் குணாதிசயங்கள் மற்றும் பரவலை விவரித்து மண் வள குன்றலுக்கான காரணங்களை  பட்டியலிடுக
  6. இந்திய விண்வெளி ஆய்வுக்கழகம் இஸ்ரோவினால் (ISRO) ஏவப்பட்ட பல்வேறு செயற்கைகோள்கள் குறித்து ஒரு விரிவான தொகுப்பு தருக
  7. இந்திய மக்கட் தொகை பரவல் மற்றும் அடர்த்தியை பாதிக்கும் காரணிகளை விளக்குக.
  8. மண் அரிப்பின் வகைகள், காரணங்கள் மற்றும் விளைவுகள் குறித்து எழுதுக.
  9. அவசர நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், தட்ப வெப்பநிலை மாற்றம் வளரும் நாடுகளின் பல்லாண்டு வளர்ச்சியை திருப்பிவிடும் எப்படி? விளக்குக
  10. தேசிய வனக்கொள்கை (1988) யின் சிறப்பு அம்சங்கள் பற்றி விவரி
  11. பருவநிலை மாற்றம் பவளப்பாறைகளை எவ்வாறு அச்சுறுத்துகிறது? பவள அமிலமயமாக்கத்தின் இயக்க முறையினை தகுந்த உதாரணங்களுடன் விளக்குக .
  12. வளர்ச்சி திட்டங்களால் சுற்றுச்சூழல் அமைப்பின் வெவ்வேறு அங்கங்களில் ஏற்படும் தாக்கங்கள் பற்றி விவரிக்கவும்.
  13. சுற்றுச்சூழல் சீர்கேட்டால் குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் முன் மொழியப்பட்ட குழந்தைகளுக்கான சுற்றுச்சூழல் திட்ட அறிக்கை பற்றி குறிப்பு வரைக.
  14. நீர் மாசுபடுதல் என்றால் என்ன? அதை இந்திய சுற்றுச்சூழல் சட்டங்கள் மூலம் எவ்வாறு கட்டுப்படுத்தலாம்.
  15. இந்தியாவில் எல் நினோ தாக்கத்தினால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் விளைவுகள் யாவை? பருவநிலை மாற்றத்தினை கட்டுப்படுத்தும் நோக்கில் COP 21-இல் சமர்ப்பிக்கப்பட்ட தேசிய அளவில் நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்பு இலக்கினை அடையும் பொருட்டு இந்தியா மேற்கொண்டுள்ள சமீபத்திய முனைவுகளின் சிறப்பம்சங்களை விவரிக்கவும்.
  16. அனல் மின் நிலையங்களில் காற்று மாசு படுதலை குறைக்க மேற்கொள்ளும் செயல் முறை மாற்றம் பற்றி விளக்குக.
  17. இந்தியாவின் தேசிய வளர்ச்சி குழுமம்  (NDC) அதன் குறிக்கோள்களை அடைய எப்படி செய்யப்படுகிறது.
  18. தெற்காசிய மண்டல ஒத்துழைப்புச் சங்கமானது (SAARC) சில நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்டது இந்த அமைப்பானது எவ்வாறு அதன் நோக்கங்களை ஒட்டி செயல்பட்டு சில சாதனைகளை அடைந்தது என்பதை விவாதிக்கவும்.
  19. வளர்ச்சி குன்றிய  நாடுகளில் வருமான சமத்துவமமின்மையை குறைப்பதில் நிதி கொள்கையின் பங்கினை விளக்குக
  20. இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப உள்கட்டமைப்பில் உள்ள குறைபாடுகளை ஆராய்க .
  21. இந்திய வேளாண்மை விலைக் கொள்கையை நிர்ணயிக்கும் காரணிகளை பற்றி விளக்குக. மேலும் அக்கொள்கையின் செயல்பாடு மற்றும் நிறைவேற்றத்தினை விளக்குக.
  22. பணவியல் கொள்கையின் நோக்கங்கள் யாவை? இந்திய ரிசர்வ் வங்கியின் பணிகளை விளக்குக.
  23. தமிழ்நாட்டின் தொடர் பொருளாதார வளர்ச்சிக்கு உலக முதலீட்டாளர்களின் சந்திப்பு 2019 ன் வெற்றி வாய்ப்பினை ஆராய்க.
  24. சிறப்பு பொருளாதார மண்டலம் பற்றி தீர ஆராய்க  (SEZs).
  25. பணவீக்கம் இடைவெளியை விளக்குக மற்றும் எப்படி பணவீக்கம் இடைவெளியை கட்டுப்படுத்த முடியும் என்பதையும் விளக்குக.
  26. "இந்தியா வளைச்சியடையாத நாடு" என்பதை ஒப்புக்கொள்வீர்களா இல்லையெனில் அதற்கான காரணங்களை தருக மற்றும் இந்திய பொருளாதாரத்தின் சிறப்பியல்புகளை விளக்குக