தமிழ்நாடு அரசாங்கம், மாநிலத்தில் பல்வேறு விவசாயத் திட்டங்களை அமுல்படுத்துவதில் அதன் சீர்மைக்கான நான்கு SKOCH விருதுகளை வென்றுள்ளது.

 • கடலூர் மாவட்டத்திலுள்ள பரங்கிப் பேட்டையில் 1100 ஏக்கர் நிலத்தை சீர்திருத்தம் செய்தது மற்றும் 100 சதவீத மானியத்துடன் விவசாயிகள் பயனடைவதற்கு 5800 இடங்களில் பன்னை குளங்களை அமைத்தல் போன்றவற்றை மேற்கொண்டதற்காக மாநில விவசாயப் பொறியியல் பிரிவு (State Agriculture Engineering Wing) இரண்டு விருதுகளைப் பெற்றுள்ளது.
 • இராமநாதபுர மாவட்ட நிர்வாகம் பன்னை குளங்களின் சிறந்த அமுலாக்கத்திற்கான ஒரு விருதைப் பெற்றுள்ளது.
 • மாநில தோட்டக்கலைத் துறை, மாநிலத்தில் 5.53 லட்சம் விவசாயிகள் பயனடையும் நுண்ணிய நீர்பாசன திட்டத்தின் அமுலாக்கத்திற்காக ஒரு விருதைப் பெற்றுள்ளது.

கோயம்புத்தூர் அடிப்படையிலான சமூக தொழில்முனைவோர் அருணாச்சலம் முருகானந்தம், 10 ஆண்டுகளுக்கு முன்பு அவர் கண்டுபிடித்த மலிவு விலை சானிடரி பேட் உருவாக்கும் இயந்திரத்திற்காக காப்புரிமைகளைப் பெற்றுள்ளார்.

 • முருகானந்தம், அவரால் 2002-ல் கண்டுபிடிக்கப்பட்ட இந்த இயந்திரத்திற்கு 2006-ல் காப்புரிமை பெறுவதற்கு முயற்சி மேற்கொண்டார்.
 • அவருடைய இயந்திரங்கள், கிராமப்புறப் பெண்களை அதிகாரப்படுத்தும் வகையில் நாடுமுழுவதும் மற்றும் வெளிநாடுகளிலும் பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்டுள்ளன.
 • 59 வயதான தொழில்முனைவோர் முருகானந்தம் பிப்ரவரி 11-ல் ஆக்ஸ்போர்டு யூனியனில் இது பற்றி உரையாற்றவுள்ளார்.

 வானியல் துறை: (Department of Space)

 • முந்தைய ஆண்டைவிட இந்த ஆண்டில் வானியல் துறைக்கு கூடுதலாக ரூ.340 கோடி ஒதுக்குவதற்கு நிதியமைச்சர் முன்மொழிந்துள்ளார்.
 • சென்ற ஆண்டில் (2019-2020) வானியல் துறைக்காக ரூ.13,139 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால், இந்த வருடத்தில் (2020-2021) வானியல் துறைக்கான ஒதுக்கீடு ரூ.13,479 கோடியாகும்.

 விளையாட்டுத் துறை: (Department of Sports)

 • சென்ற ஆண்டு ஒதுக்கப்பட்ட தொகையைவிட இந்த ஆண்டு 50 கோடி ரூபாய் கூடுதலாக்கி ரூ.2826.92 கோடியை விளையாட்டுத்துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
 • அதேபோல, ஹேலோ இந்திய திட்டத்திற்கு (Khelo India Programme) சென்றவருடம் ஒதுக்கப்பட்ட தொகை ரூ.578 கோடியுடன் கூடுதலாக ரூ.312.42 கோடியை இணைத்து இந்த வருடம் ரூ.890.42 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்திய வானியல் ஆராய்ச்சி அமைப்பு (ISRO) புவன் பஞ்சாயத்து பதிப்பு 3.0 (Bhuvan Panchayat Version 3.0) என்பதைத் தொடங்கியுள்ளது.

 • இத்திட்டத்தின்கீழ், தகவல் தேவைகளைப் புரிந்துக்கொள்வதற்கு கிராமப்பஞ்சாயத்து உறுப்பினர்களுடன் ISRO ஒத்துழைக்கும்.
 • பஞ்சாயத்துராஜ் அமைச்சகத்தின்கீழ் கிராம மேம்பாட்டு திட்டங்களின் செயல்பாடுகளுக்கு உதவுவதில் இணைய முகப்பு நோக்கம் கொண்டுள்ளது.
 • இத்திட்டம், இரண்டு வருடங்களுக்கு செயல்படும்.
 • புவன் (Bhuvan) என்பது ISRO ஆல் உருவாக்கப்பட்ட ஒரு செயற்கைக் கோள் விண்ணப்பமாகும்.
 • அது, பூமியின் 2னு மற்றும் 3னு பிரதிபலிப்பைக் கண்டுபிடிப்பதற்கு பயன்படுத்துவோரை அனுமதிக்கிறது.

புதிய கொரோனா வைரஸ் “COVID – 19” என்று உலக சுகாதார அமைப்பால் (WHO) பெயரிடப்பட்டுள்ளது.

 • இதில் „CO‟ என்பது „Corona‟ வையும், „VI‟ என்பது „Virus‟ ஐயும், „D‟ என்பது „Disease‟ ஐயும் மற்றும் „19‟ என்பது வருடத்தையும் (2019) குறிப்பிடுகின்றன.

இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்தா தாஸ், ஆசிய பசுபிக் பிராந்தியத்திற்கான 2020 ஆம் ஆண்டின் மத்திய வங்கியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளர்.

கொரோனா வைரஸ் பரவிய மிகவும் அபாயகரமான நாடுகளின் வரிசையில் 17வது இடத்தை இந்தியாப் பெற்றுள்ளது.

 • கொரோனா வைரஸால் முதல் 10 அபாயகரமான நாடுகள் - தாய்லாந்து, ஜப்பான், தென் கொரியா, ஹாங்காங், தைவான், அமெரிக்கா, வியட்நாம், மலேசியா, சிங்கப்பூர் மற்றும் கம்போடியா போன்றவைகளாகும்.

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான மோட்டேரா மைதானம், பிப்ரவரி 24-ல் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்பின் விஜயத்தை முன்னிட்டு பிப்ரவரி 21-ல் குஜராத் கிரிக்கெட் கழகத்தால் (Gujarat Cricket Association – GCA) ஊடகத்திற்கு திறந்து வைக்கப்பட்டது.

 • 63 ஏக்கர் நிலத்தில் பரந்துள்ள 1,10,000 பேர் அமரக்கூடிய திறன் கொண்ட இம்மைதானம் “நமஸ்தே டிரம்ப்” நிகழ்வை முதன்முதலாக நடத்தும்.
 • அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் பிப்ரவரி 24-ல் தனது இந்திய விஜயத்தின்போது, இந்த மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைப்பார்.
 • இந்த மைதானம், இந்தியாவின் இரும்பு மனிதர் மற்றும் இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேல் பெயரிடப்பட்டுள்ளது.
 • ஏற்கனவே, 2018-ல் 182 மீட்டர் உயரத்தில் (597 அடி) கட்டிமுடிக்கப்பட்ட ஒற்றுமையின் சின்னம் குஜராத்தில் உலகின் மிகப்பெரிய சிலையாக அமைந்துள்ளது.
 • $100 மில்லியன் செலவில் வட்டவடிவில் வடிவமைக்கப்பட்டு இந்திய கிரிக்கெட் வீரர்கள் அணியும் உடையின் நிறமான நீளம் மற்றும் காவி நிறத்தில் இருக்கைகளை அமைத்து இந்த கிரிக்கெட் மைதானம் முடிக்கப்பட்டுள்ளது.
 • இந்த மைதானம், மெல்போர்ன் கிரிக்கெட் சங்கத்தால் Melbourne Cricket Club) 1853-ல் கட்டப்பட்ட உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான 1 லட்சம் இருக்கையைப் பெற்றுள்ள மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தை முந்துகிறது.
 • இந்தியாவின் கொல்கத்தாவிலுள்ள ஈடன்கார்டன் கிரிக்கெட் மைதானம் மிகவும் பழமையானதாகவும் மற்றும் இரண்டாவது பெரிய கிரிக்கெட் மைதானமாகும்.

நடப்பு சாம்பியன் பஜ்ரங் புனியா புதுடெல்லியில் IGI மைதானத்தில் நடைபெற்ற K D ஜாதவ் பளுதூக்கும் போட்டியில் 65 கிலோ பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார் ஆனால் வளர்ந்து வரும் ரவி தகியா என்பவர் தங்கப்பதக்கம் வென்றார்.

The All India Football Federation (AIFF) – has confirmed the continental spot allocations for next three seasons with the Indian Super League (ISL) final winner getting an AFC Cup playoff spot.

பிரதமர் நரேந்திரமோடி, சனிக்கிழமை ஒரிசாவின் தலைநகரான புவனேஷ்வரில் ஒரு காணொளி காட்சி வசதி மூலமாக முதலாவது ஹேலோ இந்திய பல்கலைக்கழக விளையாட்டுகளைத் தொடங்கிவைத்தார்.

 • நாடு முழுவதும் உள்ள 159 பல்கலைக்கழகங்களிலிருந்து 3400 தடகள வீரர்கள் 17 விளையாட்டுகளில் பங்குபெற உள்ளார்கள்.
 • இது, ஹேலோ இந்திய பல்கலைக்கழக விளையாட்டுகளின் முதல் நிகழ்வாகும்.
 • ஹேலோ இந்திய பள்ளிவிளையாட்டுகள் 2018-ல் தொடங்கப்பட்டது மற்றும் அதிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஜனவரி-பிப்ரவரி மாதத்தில் நடத்தப்படுகிறது.
 • ஹேலோ இந்தியா என்பது கிராமப்புற அளவில் விளையாட்டுக்கள் மேம்பாட்டிற்கான ஒரு தேசிய திட்டமாகும்.
 • இவ்வித விளையாட்டுகள், இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுக்கான மத்திய அமைச்சகத்தால் நடத்தப்படுகின்றன.

மேலும் நடப்பு நிகழ்வுகளுக்கு இங்கே தரவிறக்கம் செய்யவும்

TNPSC Current affairs and Books - Apps on Google Play
TNPSC text books from 6th to 12th current affairs This app helps you to prepare for TNPSC GROUP EXAMS. Group I, Group II, Group IIA Group IV CCSE VAO Police

உங்கள் திறனை சோதிக்க இங்கே தரவிறக்கம் செய்யவும்

FREE TNPSC GROUP EXAMS - Apps on Google Play
TNPSC GROUP EXAMS. This app helps you to prepare for TNPSC GROUP EXAMS. You can take exams for previous year question paper. The app is designed to view offline and professional looking. You can take practice for the below mentioned exams. Group I, Group II, Group IIA Group IV CCSE VAO Police P…