1. விண்ணப்பதாரர்கள்  www.tnpsc.gov.in / www.tnpscexams.net /
  www.tnpscexams.in ஆகிய இணையதளங்கள் மூலம் இணையவழியே மட்டுமே விண்ணப்பிக்கவேண்டும்.
 2. எந்தவொரு பதவிக்கும் விண்ணப்பிக்க, ஒருமுறை பதிவு எனப்படும் நிரந்தரப் பதிவு மற்றும் சுயவிவரப்பக்கம் (Dashboard) ஆகியன கட்டாயம் ஆகும்.
 3. நிரந்தரப்பதிவில் பதிவு செய்ய விண்ணப்பதாரர்கள் தங்களது புகைப்படம் கையொப்ப நகல் ஆகியவற்றை சிடி / டிவிடி பென் டிரைவ் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை அவரவர் வசதிகேற்ப தயாராக வைத்திருக்கவும்.
 4. அன்றோ அல்லது அதற்கு முன்னரோ நிரந்தரப்பதிவு செய்துள்ள விண்ணப்பதாரர்கள், ஏற்கனவே அவர்கள் பெற்றுள்ள பயனாளர் குறியீடு மற்றும் கடவுச்சொல் ஆகியவற்றைப் பயன்படுத்தி புதிய நிரந்தரப்பதிவு முறையில் தங்களின் சுய விவரப் பக்கத்தினை ஏற்படுத்த வேண்டும்.
 5. நிரந்தரப்பதிவு என்பது எந்தவொரு பதவிக்கான விண்ணப்பமும் அல்ல. இது விண்ணப்பதாரர்களின் விவரங்களை பெற்று அவர்களுக்கு சுயவிவரப் பக்கம் ஒன்றிளை உருவாக்க மட்டுமே இது பயன்படும். எந்தவொரு பதவிக்கும் விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், தேர்வாணைய இணையதளத்தில் அறிவிக்கை செய்யப்பட்டுள்ள பதவிகளுக்கு எதிரே "Apply என்பதை சொடுக்கி நிரந்தரப்பதிவுக்குரிய பயனாளர் குறியீடு மற்றும் கடவுச்சொல் ஆகியவற்றை உள்ளீடு செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
 6. புதிதாக பதிவு செய்பவர்களும் ஏற்கனவே பதிவு செய்த விண்ணப்பதாரர்களும் உள்நுழையும் போது கேட்கப்படும் எஸ்.எஸ். எல்.சி பதிவு எண், தேர்ச்சிபெற்ற  வருடம் மற்றும் மாதம், சான்றிதழ் வழங்கிய குழுமம் ஆகிய தகவல்களை சரியாக பதிவு செய்ய வேண்டும் மேற்படி விவரங்கள் தவறாக இருப்பின் நிரந்தரப் பதிவும் தேர்வுக்கான விண்ணப்பமும் எந்தவொரு நிலையிலும் நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளது.
 7. ஒன்றுக்கு மேற்பட்ட எஸ் எஸ்.எல் சி சான்றிதழ் வைத்திருப்பவர்கள் தாங்கள் இறுதியாக தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற சான்றிதழில் உள்ள விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.
 8. நிரந்தரப்பதிவுக்கு பயன்பாட்டில் உள்ள மின்னஞ்சல் முகவரி மற்றும் மகப்பேசி எண் ஆகியவை கட்டாயம் ஆகும் மின்னஞ்சல் முகவரி மற்றும் மகப்போடான் ஆகியவற்றை தொடர்ந்து பயன்பாட்டிலேயே வைத்திருக்க வோடும் தேர்வு தொடர்பான செய்திகள் அனைத்தும் வினானனப்பதாரர் பதிவு செய்துள்ள மின்னஞ்சல் முகவரி மற்றும் கைப்பேசி எண் ஆகியவற்றில் மட்டுமே அனுப்பப்படும்.
 9. விண்ணப்பதாரர்கள் நிரந்தரப்பதிவில் தங்களது விவரங்களைப் பதிவு செய்திருந்தாலும், அவர்கள் குறிப்பிட்ட தேர்விற்கு விண்ணப்பிக்கும்போது அந்த விண்ணப்பத்தில் பதிவு செய்யும் விவரங்கள் மட்டுமே அந்த பதவிக்காக ! தேர்வுக்காக அவர்கள் தரும் விவரங்களாக எடுத்துக்கொள்ளப்படும்.
 10. ஒரு குறிப்பிட்ட பதவிக்கான விண்ணப்பத்தில் விண்ணப்பதாரர்கள் தரும் பெயர் விண்ணப்பிக்கும் பதவியின் பெயர், சாதிப்பிரிவு பிறந்த தேதி, முகவரி, மின்னஞ்சல் முகவரி, தேர்வு மையம் போன்ற விவரங்கள் இறுதியானவை என கருதப்படும் இருப்பினும் சில விவரங்களை தேர்வுக்கு விண்ணப்பிக்க கொடுத்துள்ள இறுதிநாள் முன்னரும் கூட மாற்ற முடியாது எனவே விண்ணப்பதாரர்கள் தங்களது விவரங்களை உள்ளீடு செய்யும் போது மிகுந்த கவனத்துடன் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் நிரந்தரப்பதிவு அல்லது இணையவழி விண்ணப்பம் ஆகியவற்றில் மாற்றம் செய்யக்கோரி பெறப்படும் எந்தவொரு கோரிக்கையும் பரிசீலிக்கப்படமாட்டது.
 11. நிரந்தரப்பதிவு குறித்த அறிவுரைகள் மற்றும் விளக்கப்படங்கள் www.tnpscexams.net / www.tnpscexams. ஆகிய இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.
 12. பயனாளர் குறியீடு மற்றும் கடவுச்சொல் பெற்றிருக்கும் விண்ணப்பதாரர்கள் அதனைப் பயன்படுத்தி உள்நுழைந்தவுடன் நிரந்தரப் பதிவில் ஏற்கனவே பதிவு செய்துள்ள விவரங்கள் திரையில் தெரிய வரும் தேர்வாணையத்தால் அவ்வப்போது வெளியிடப்படும் ஒவ்வொரு தேர்வுக்கும் விண்ணப்பிக்கும் போது அதற்குரிய கூடுதலாக தேவைபடும் விவரங்களையும் பதிய வேண்டும்.
 13. விண்ணப்பத்தில் விவரங்களைப் பதிவு செய்து சமர்பித்தவுடன் விண்ணப்பதாரர்கள் தங்களது தேர்வுக்கட்டணங்களை செலுத்த கீழ்காணும் ஏதேனும் ஒரு முறையிளை தேர்வு செய்யலாம். அ) இணையவழி செலுத்து முறை. ஆ) பற்று அட்டை கடன் அட்டை. இ) வங்கி செலுத்துச் சீட்டு. அஞ்சலக செலுத்து சிட்டு
 14. விண்ணப்பதாரர்கள் தாங்கள் செலுத்திய விண்ணப்பக் கட்டணம் உடனடியாக ஒத்திசைவு செய்யப்பட வேண்டுமாயின் இணையவழி வங்கி சேவை அல்லது பற்று அட்டை கடன் அட்டை மூலமாக கட்டணங்களை செலுத்தலாம்.
 15. செலுத்துச்சிட்டு மூலம் செலுத்தப்படும் கட்டணங்கள் ஒத்திசைவு பெற குறைந்தபட்சம் இரண்டு வேலை நாட்கள் ஆகும்.
 16. விண்ணப்பதாரர்கள் ஒருவேளை இணையவழி கட்டனம் செலுத்தும் முறையை தெரிவுசெய்தால் விண்ணப்பத்தில் கூடுதல் பக்கம் திரையில் தெரிய வரும். அந்த இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள அறிவுரைகளை கவனமாகப் பின்பற்றி தேவையான விவரங்களைப் பதிவு செய்து கட்டணம் செலுத்த வேண்டும்.
 17. விண்ணப்ப கட்டணம் விவரங்களைப் பதிவு செய்த பின்னர் அதற்கான விவரம் திரையில் வரும் வரை காத்திருக்கவும் அதுவரை Back அல்லது Refresh ஆகியவற்றை சொடுக்காமல் காத்திருக்கவும். இல்லையெனில் பணபரிமாற்றம் தடைப்படுதல் அல்லது இரண்டாம் முறையாக பணம் செலுத்தும் சூழ்நிலை ஏற்படும்.
 18. இணையவழி கட்டணம் செலுத்தும் முறை நிறைவு செய்யப்பட்டவுடன், அந்த தேர்வுக்கான விண்ணப்ப எண் திரையில் தோன்றும் அதனை விண்ணப்பதாரர்கள் அந்தத் தேர்வின் எதிர்காலத் தேவைக்காக குறித்துவைத்துக் கொள்ள வேண்டும்.
 19. இணையவழியில்லா கட்டணம் செலுத்தும் முறையை தேர்ந்தெடுக்கும் விண்ணப்பதாரர்கள் அஞ்சலகத்தினையே அல்லது பாரத ஸ்டேட் வங்கியினையோ தேர்வு செய்ய வேண்டும்.
 20. கட்டணம் செலுத்தும் முறையை தேர்ந்தெடுத்தவுடன் கணினி உருவக்கும் செலுத்துச்சீட்டினை அச்சிட்டு, அருகிலுள்ள பாரத ஸ்டேட் வங்கியிலோ அல்லது அஞ்சலகத்திலோ கட்டணத்தை செலுத்தலாம்.
 21. கட்டணம் செலுத்தும் முறையை தேர்வாணையம் எந்த நேரத்திலும் மாற்றும் உரிமை உண்டு.
 22. பாரத ஸ்டேட் வங்கியிலோ அல்லது அஞ்சலகத்திலோ கட்டணத்தை செலுத்திய பின்னர் விண்ணாப்பதாரருக்குரித்தான செலுத்துச்சிட்டின் நகலினை பெற்றுக்கொள்ள வேண்டும். செலுத்துச்சீட்டில் பணம் பெறுபவரின் சரியான கையொப்பம் பரிமாற்ற எண் கிளையின் பெயர் வங்கிக்கான குறியீட்டு எண் பணம் செலுத்திய தேதி போன்ற விவரங்கள் சரியாக உள்ளனவா என்று சரி பார்த்துக்கொள்ளவும்.
 23. விண்ணப்பதாரர்கள் வங்கியிலோ அல்லது அஞ்சலகத்திலோ கட்டணத்தை பதிவு செய்த இரண்டு நாட்களுக்குள் செலுத்தினால் இணையவழி வினாணப்பம் சரியாக உள்ளதாக கருதப்படும்.
 24. விண்ணப்பதாரர்கள் விண்ணப்பநகலினையோ அல்லது சான்றிதழ்களையோ தேர்வாணையத்திற்கு அனுப்பத்தேவையில்லை விண்ணப்பதாரர்கள் அடுத்தகட்ட தெரிவுக்கு தேர்வானால் மட்டுமே அவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும்.

குறிப்பு

 1. விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்க குறிப்பிடப்பட்டுள்ள கடைசி நாள் வரை காத்திருக்காமல் அதற்கு முன்னரே போதிய கால அவகாசத்தில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள், ஏனெனில் கடைசி நாளில் அதிகப்படியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும்போது விண்ணப்பம் சமர்ப்பிப்பதில் தாமதமோ அல்லது தொழில்நுட்ப பிரச்சனைகளோ எழ வாய்ப்புள்ளது.
 2. மேற்கூறிய காரணங்களால் விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்களை கடைசி கட்ட நாட்களில் சமர்ப்பிக்க இயலாது போனால் அதற்கு தேர்வாணையம் பொறுப்பாகாது.
 3. விண்ணப்பதாரர்கள் தங்களது மின்னஞ்சல் முகவரி, கடவுச்சொல் அல்லது கைப்பேசி எண் ஆகியவற்றை மற்றவர்களுடன் எந்த ஒரு சூழ்நிலையிலும் பகிர்ந்து கொள்ள கூடாது விண்ணப்பதாரர்கள் தங்களுக்கென மின்னஞ்சல் முகவரி ஏதுமில்லை எனில் முகவரியை விண்ணப்பிக்கும் அவர்கள் முன்னர் பயன்பாட்டில் புதிதாக ஒரு உருவாக்கிக் மின்னஞ்சல் கொள்ளவும் அதனைத்தொடர்ந்து பயன்பாட்டில் வைத்திருக்குமாறுஅறிவுறுத்தப்படுகிறார்கள்.
 4. விண்ணப்பதாரர்கள் தங்களது வினாணப்பத்திலுள்ள விவரங்களை தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதிவரை மாற்றிக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. கடைசி நாளுக்குப் பிறகு அவர்கள் விண்ணப்பத்தில் எந்தவொரு மாறுதலையும் செய்ய இயலாது மேலும் சில விவரங்களை விண்ணப்பதாரர்கள் எந்த நிலையிலும் மாற்ற இயலாது எனவே விண்ணப்பதாரர்கள் தாங்கள் விண்ணப்பிக்கும் போது மிகுந்த கவனத்துடன் விவரங்களைப் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் விண்ணப்பத்தில் தவறாக கொடுக்கப்பட்ட விவரங்களை மாற்றிக்கொள்ள வேண்டி விண்ணப்பதாரர்களிடமிருந்து பெறப்படும் எந்தவொரு வேண்டுகோளும் பரிசீலிக்கப்படமாட்டாது.
 5. விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தில் கோரப்பட்டுள்ள விவரங்களை மிகுத்த கவனத்துடன் உள்ளீடு செய்து விண்ணப்பத்தினை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள், சமர்ப்பிக்கும் முன்னர் தாங்கள் அளித்த விவரங்கள் அனைத்தும் சரியாக உள்ளனவா என சரிபார்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் விண்ணப்பதாரர்களின் பெயர். அவர்களது பெற்றோரின் பெயர் ஆகியவற்றை சான்றிதழ்களில் உள்ளபடி மிகச்சரியாக பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் மேற்படி விவரங்களில் மாற்றங்கள் ஏதுமிருப்பின் அவர்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளது.
 6. விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட வேண்டிய விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்டுள்ள கடைசி நாளுக்குப்பின்னர் விவரங்களை மாற்ற வேண்டி பெறப்படும் எந்தவொரு கோரிக்கையும் விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தில் பரிசீலிக்கப்படமாட்டாது தரும் தவறான முழுமையற்ற விவரங்கள் அல்லது விடுபட்டுப்போன விவரங்களுக்கு தேர்வாணையம் பொறுப்பாகாது.
 7. இணையவழி கட்டணம் செலுத்தும் முறையில் ஏற்படும் இடர்பாடுகளுக்கும் தோல்விகளுக்கும் தேர்வாணையம் பொறுப்பாகாது.
 8. கூடுதல் விவரங்கள் அல்லது சந்தேகங்களுக்கு 8754000961 ல் உள்ள உதவி மையத்தையோ அல்லது technicalhelpatnpscexams.in என்ற மின்னஞ்சல் முகவரியையோ தொடர்புகொள்ளலாம்.